நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனக்கு எதிராக பரப்பப்படும் எதிர்மறை கருத்துகள் குறித்து பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசஃப், இரட்டா படங்களின் மூலம் அபாரமான நடிப்புத் திறன் கொண்டவர் எனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். முக்கியமாக, நடிகர் கமல் ஹாசனும் ஜோஜூ நடிப்பைப் பாராட்டியது பெரிதாகக் கவனிக்கப்பட்டது.
ஜோஜூ இயக்கிய பனி திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. இன்றும் பனி திரைப்படத்தைப் பாராட்டி கருத்துகள் பகிரப்படுகின்றன.
ஜோஜூ ஜார்ஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு, ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, 100 புதுமுக நடிகர்களை ஜோஜூ அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்த நிலையில், தனக்கு எதிராக பிரபல நடிகரும் அவரது மனைவியும் திட்டமிட்டு எதிர்மறையான கருத்துகளைப் பகிர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். யார் அந்த நடிகர் என்பது குறித்து வெளிப்படையாக சொல்லவில்லை.
Actor Joju George has spoken about the negative comments being spread against him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











