எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கும் ராம் சரண்!

ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு.

News image

ராம் சரண்

Updated On :27 மார்ச் 2025, 6:44 am

தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கடைசியாக நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், தனது அடுத்தப் படத்தை கட்டாயமாக வெற்றிப் படமாக்கும் முனைப்பில் ராம் சரண் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேசிய விருது பெற்ற ‘உப்பெனா’ படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கிறார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அதிக பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

பெத்தி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் ராம் சரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.

பெத்தி படத்தின் போஸ்டர் புஷ்பா படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.