ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

News image
Updated On :27 மார்ச் 2025, 3:06 pm

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் விமல் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ நாளை (மார்ச் 28) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 7 மொழிகளில் வெளியாகிறது.

நடிகை லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் ஆஹா தமிழ் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அகத்தியா திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர்கள் சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்து நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட செருப்புகள் ஜாக்கிரத்தை இணையத் தொடர் ஜீ 5 ஒடிடியில் நாளை பார்க்கலாம்.

இயக்குநர் மதியழகன் இயக்கத்தில் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட விஜய் எல்எல்பி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை பார்க்கலாம்.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் பேபி & பேபி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.