குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

விரைவில் குக் வித் கோமாளி புதிய சீசன்: பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்பு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடர்பாக...

News image
Updated On :31 மார்ச் 2025, 1:45 pm IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

இதற்குக் காரணம் சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதுதான். சமையல் நன்கு தெரிந்த குக்குகள், சமையம் தெரியாத கோமாளிகளுடன் சேர்ந்து சமைக்கும்போது நடக்கும் கலாட்டாக்களை வைத்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

ரக்‌ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார்.

மணிமேகலைக்குப் பதிலாக, சீனியர் கோமாளியாக பங்கேற்று வரும் புகழ் பதிய தொகுப்பாளராக பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் பிரியங்கா முதலிடத்தையும் சுஜிதா இரண்டாவது இடத்தையும் முகம்மது இர்ஃபான் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக குக்குகள், கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

அண்மையில் நடந்துமுடிந்த பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள், இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படும் தேதி மற்றும் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.