விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நாகர்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்!

தெலுங்கில் முன்னணி நாயகனான நாகர்ஜுனாவின் 100வது படத்தை தமிழ் சினிமா இயக்குநர் இயக்கவுள்ளார்.

நாகர்ஜுனா - கோப்புப் படம்

Published On :

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான நாகர்ஜுனாவின் 100வது படத்தை தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் இயக்கவுள்ளார்.

தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தாலும், அவ்வபோது நேரடியாகத் தமிழ் படங்களிலும் நாகர்ஜுனா நடிப்பதுண்டு.

அவ்வாறு ரட்சகன் முதல் கார்த்தி உடனான தோழா வரை பல படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

தற்போது நடிகர் தனுஷ் உடன் இணைந்து குபேரா படத்திலும் நாகர்ஜுனா நடித்து வருகிறார். ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் கூலி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரு படங்களும் தமிழில் நேரடியாக வெளியாகவுள்ளன.

இந்நிலையில், தற்போது மேலுமொரு தமிழ் சினிமா இயக்குநர் படத்தில் நாகர்ஜுனா நடிக்கவுள்ளார்.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை இயக்கிய, ரா. கார்த்தி இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கவுள்ளார். இது நாகர்ஜுனாவின் 100வது படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.