தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

ராமன் தேடிய சீதை தொடர் திடீர் நிறுத்தம்! ரசிகர்கள் வருத்தம்!

ராமன் தேடிய சீதை தொடர் நிறுத்தப்பட்டது தொடர்பாக...

ராமன் தேடிய சீதை - படம் | இன்ஸ்டாகிராம்

Updated On :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமன் தேடிய சீதை தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.

ராமன் தேடிய சீதை தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழில் நேரடியாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பபு செய்யப்பட்டது. அதேபோல் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் ராமன் தேடிய சீதை தொடர் 50 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த மே 19 ஆம் தேதிமுதல்(திங்கள்கிழமை) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சின்ன திரையில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்து ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த காலங்களில் ஒளிபரப்பான உள்ளம் கொள்ளை போகுதடா, என் கணவன் என் தோழன் உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களிடையே மிகவும்பிரபலமடைந்த தொடர்கள் ஆகும்.

ராமன் தேடிய சீதை தொடர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராமன் தேடிய சீதை தொடர் ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில், “ராமன் தேடிய சீதை ஏன் போடவில்லை. இனி போடும் எண்ணம் இருக்கிறதா? இல்லையா? நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் சீரியல் தயவுசெய்து மீண்டும் போடுங்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இத்தொடரை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதை பரிசீலித்து ராமன் தேடிய சீதை தொடரை தொடர் குழு மீண்டும் ஒளிபரப்புமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.