புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாயகனாகும் பிரபல தயாரிப்பாளர்!

நாயகனாக அறிமுகமாகிறார் பிரபல தயாரிப்பாளர்...

News image
Updated On :22 மே 2025, 9:02 am

DIN

பிரபல தயாரிப்பாளர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழில் நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானர் கேஜே ராஜேஷ். கேஜேஆர் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தவர் ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இதில், ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், டாக்டர், அயலான் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

ஸ்வதிக் விஷன்ஸ் தயாரிக்கும் இந்த முதல் படத்தின் அறிவிப்பு நாளை (மே. 23) காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.