நடிகர் கமல்ஹாசன் நாயகன் திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புரமோஷனுக்கான நேர்காணலின்போது நாயகன் படம் குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, கமல்ஹாசன், “நாயகன் படத்தின் 2-வது நாள் படப்பிடிப்பிலேயே இப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமையும் எனத் தெரிந்துவிட்டது. சரியான திட்டமிடல் இருந்ததால் ஒவ்வொருவரும் ஒரு வேலையைச் செய்தோம். நான் நடிப்பதையும் தாண்டி பெண் ஒருவருக்கு வயதான தோற்றத்திற்காக மேக்கப் போட்டுவிடுவேன்.
தினமும் அவர் என் அலுவலகம் வருவார். அவருக்கு மேக்கப் போட்டுவிட்டபின் நானும் போட்டுக்கொள்வேன். பட்ஜெட்டும் அதிகம் இல்லாததால் மும்பையில் நாயகன் படப்பிடிப்பை மொத்தமாகவே 4 நாள்கள்தான் நடத்தினோம். தேவைப்பட்ட நாள்களைவிட குறைவாக இருந்தாலும் அனைத்து துறையினரும் கடுமையான உழைப்பைக் கொடுத்ததால் அது சாத்தியமானது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: கேன்ஸ் விழாவில் குங்கும திலகமிட்டு வந்த ஐஸ்வர்யா ராய்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









