மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

சிங்கப் பெண்ணே தொடரில் இணையும் பூஜிதா!

தமிழில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் சிங்கப் பெண்ணே தொடரில் நடிகை பூஜிதா இணையவுள்ளார்.

News image

பூஜிதா - இன்ஸ்டாகிராம்

Updated On :27 மே 2025, 7:57 pm IST

தமிழில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் சிங்கப் பெண்ணே தொடரில் சின்ன திரை நடிகை பூஜிதா இணையவுள்ளார்.

இத்தொடரில் புதிய பாத்திரத்தை அறிமுகம் செய்து, அதன் மூலம் தொடரின் சுவாரசியத்தைக் கூட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் சின்ன திரைகளில் அதிக டிஆர்பி பெற்று முதன்மைத் தொடர்களின் பட்டியலில் உள்ள சிங்கப் பெண்ணே தொடரில், பூஜிதாவின் வருகை மேலும் ரசிகர்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அமல்ஜித் நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் நடிகை தர்ஷக் கெளடா நடித்து வருகிறார்.

இவர்களுடன் விஜே பவித்ரா, ஜீவிதா, யோகலட்சுமி, நிவேதா ரவி, இந்துமதி, மணிகண்டன், தீபா நேந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

மிகவும் வலிமையான பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, பெண்கள் மேம்பாடு குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நடுத்தரக் குடும்பத்து இளம்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை பிரதிபலிப்பதால், சிங்கப் பெண்ணே தொடர் நிலையான ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளது.

இதனிடையே பூஜிதாவின் வருகை ஆழமான பாத்திரத்தைக் கொண்டிருக்கும் என்றும், இதனால் இத்தொடருக்கான பார்வையாளர்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.