அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்! முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

ஜீ தமிழின் புதிய தொடரில் நாயகியாகும் லாந்தர் பட நடிகை!

லாந்தர் பட நடிகை ஸ்வேதா டோரதி, சின்ன திரையில் நாயகியாக அறிமுகமாகிறார்.

ஸ்வேதா டோரதி - இன்ஸ்டாகிராம்

Updated On :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் லாந்தர் பட நடிகை ஸ்வேதா டோரதி, நாயகியாக நடிக்கவுள்ளார். இத்தொடருக்கு தமிழ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜீ தமிழில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள வீரா தொடரை தயாரித்துவரும் புளூ புரொடக்‌ஷன் நிறுவனம் இத்தொடரைத் தயாரிக்கவுள்ளது.

ஜீ தமிழில் மக்கள் மனங்களைக் கவரும் வகையிலான தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகின்றன. இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையிலான திரைக்கதையுடன் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

அந்தவகையில் தமிழ் என்ற புதிய தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் நடிகை ஸ்வேதா டோரதி நாயகியாக நடிக்கிறார். இவர், பார்க், லாந்தர் உள்ளிட்டப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

ஸ்வேதா டோரதி

ஸ்வேதா டோரதி - இன்ஸ்டாகிராம்

தற்போது சின்ன திரையில் முதல்முறையாக நாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் என்ற பாத்திரத்திலேயே ஸ்வேதா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் ஆழமான நடிப்புத் திறமைக்கு ஏற்ப புதிய கதைக்களத்துடன் தமிழ் தொடர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.