பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

‘நரிவேட்டை’ படத்தில் காட்சிகள் நீக்கம்? படக்குழு விளக்கம்!

நரிவேட்டை திரைப்படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டன என்ற செய்திகளுக்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

’நரிவேட்டை’

Published On :

டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படத்தின் சில காட்சிகள், தணிக்கை வாரியத்தால் நீக்கப்பட்டுள்ளன என்று வெளியான செய்திகளுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது.

டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம் ‘நரிவேட்டை’. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவானதாகச் சொல்லப்படும் இந்தப் படம்; கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால், இப்படம் மீண்டும் தணிக்கைச் செய்யப்பட்டு சில முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதையடுத்து, அப்படி எந்தவொரு காட்சிகளும் நீக்கப்படவில்லை எனவும், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் ஒன்று தணிக்கைச் செய்யப்பட்டு தற்போது இணைக்கப்பட்டுள்ளது எனவும் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் சினிமா கம்பனி விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

“அன்பான நேயர்களே, நரிவேட்டை திரைப்படம் மீண்டும் தணிக்கைச் செய்யப்பட்டு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி எந்தவொரு காட்சிகளும் நீக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். பிரபல ராப் பாடகர் வேடனின் ‘வாடா வேடா’ பாடல் மட்டுமே தணிக்கைச் செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் வெளியான நாளன்று இருந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போதும் உள்ளது எனவும், ஊடகங்கள் மற்றும் சினிமா பிரியர்கள் எந்தவொரு தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாமெனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.