

தி கேர்ள்பிரண்ட் பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் நடிகை ரஷ்மிகாவின் கையில் விஜய் தேவரகொண்டா முத்தம் கொடுத்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ரஷ்மிகா நடித்த தி கேர்ள்பிரண்ட் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டாவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:
பல பெண்களுக்குத் தேவையான தைரியம் அளிக்கும் படத்தில் நடித்து, நீ இங்கு நிற்பதைப் பார்க்க, எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது ராஷி.
இந்தப் படத்தின்போதே நீ, பல ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்தாய். இது வெறுமனே சினிமா மட்டுமே கிடையாது; இது நோக்கத்திற்காக நடந்துள்ளது.
நான் இன்று படத்தைப் பார்த்தேன். படம் என்னை உணர்ச்சி மிகுதியாக்கியது. பல இடங்களில் கண்ணீர் வந்தது. முக்கியமான சில இடங்களில் இதயம் கனமாக இருந்தது.
சில நேரங்களில், என்னால் சரியாக உட்காரவும் முடியவில்லை. நடக்கும்போதும் என்னால் சரியாக இருக்க முடியவில்லை. சமீபத்தில், நான் பார்த்திலேயே மிகச் சிறந்த படம் இதுதான்.
தன்னுடைய பிரைம் நேரத்தில் ரஷ்மிகா இந்தமாதிரியான கதைகளில் நடிப்பது மிகவும் பாராட்டக்கூடியது. அவரது பயணத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.