சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஓடிடியில் வெளியானது மதராஸி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image

மதராஸி பட போஸ்டர். - படம்: எக்ஸ் / ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ்

Updated On :1 அக்டோபர் 2025, 6:48 am

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதராஸி படம் கடந்த செப். 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

முக்கியமாக, நடிகர் வித்யூத் ஜமாலின் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைப்பும் ரசிகர்களிடையே பெரிதாகப் பேசப்பட்டது.

இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மதராஸி திரைப்படம் இன்று(அக், 1) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.