ரீனாதான் மகளென அறியும் விஜய்! பரபரப்பான காட்சிகளுடன் வெளியான ஹார்ட் பீட் தொடர்!

பரபரப்பான காட்சிகளுடன் வெளியான ஹார்ட் பீட் தொடர் காட்சிகள்.
ஹார்ட் பீட் தொடர் காட்சி
ஹார்ட் பீட் தொடர் காட்சிபடம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

ஹார்ட் பீட் - 2 இணையத் தொடரில் தனது மகள்தான் ரீனா என, விஜய் தெரிந்துகொண்டுள்ளார்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் இணையத் தொடர் ஹார்ட்பீட் - 2. இந்தத் தொடரில் நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இத்தொடரின் கதையின்படி அனுமோளின்(ரதி) மகளான தீபா பாலுவை(ரீனா) குழந்தையாக இருக்கும்போது ரதி காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.

இதனிடையே, திடீர் திருப்பமாக ரீனாவின் தந்தை கார்த்திக்(விஜய்) கதைக்குள் வந்தார். இதனால் ரதி மற்றும் விஜய்யின் கடந்த கால வாழ்க்கையின் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முன்னதாக, விஜய்தான் ரீனாவின் தந்தை என ரதி கூறிவிடுகிறார். கடந்த கால வழக்கொன்றில் விஜய்யை, காவல் துறை கைது செய்கிறது. ரீனாவுக்கு திடீர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கடந்த வார எபிசோடுகள் விறுவிறுப்புடன் நிறைவடைந்த நிலையில், இந்த வாரத்துக்கான எபிசோடுகள் எப்போது வெளியாகும் என்று நேற்று நள்ளிரவு முதல் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று(அக். 30) வெளியான எபிசோடில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ரீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

அறுவைச் சிகிச்சை செய்ய விஜய்தான் சரியான தேர்வு என அனைவரும் கூறும்போது, விஜய் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், மருத்துவராக பணியாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்தச் சூழலில்தான் ரீனாதான் தனது மகள் என்ற உண்மை, விஜய்யிக்கு தெரிய வருகிறது. அதோடு இந்த வார எபிசோடுகள் நிறைவடைகிறது.

வழக்கமாக, வாரவாரம் 4 எபிசோடுகள் வெளியாகும் நிலையில், இன்று காலை 3 மட்டுமே வெளியானது. தற்போது ரீனாதான் தன்னுடைய மகளென அறியும் விஜய் தொடர்பான எபிசோடு, ஸ்வாரசியம் கருதி தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த வாரத்தோடு ஹார்ட் பீட் தொடரின் இரண்டாவது பாகம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Vijay finds out that Reena is his daughter in the web series Heartbeat - 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com