பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?

ஜெயிலர் - 2 குறித்து...

News image

நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், ஷாருக்கான் - x

Updated On :10 ஏப்ரல் 2026, 5:29 pm IST

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் மோகன்லால் ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கான தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாகவும் ஒரே ஒரு காட்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகிய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளின் சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், திடீரென ஷாருக்கான் விலகியதால் அந்தக் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாருக்கானால் பழைய தோற்றத்தை மாற்ற முடியாது என்பதாலும் அவர் நடித்த கிங் படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஜெயிலர் - 2 படத்திலிருந்து அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

Summary

actor pawan kalyan replaces actor sharukhkhan role in jailer - 2 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.