நடிகர் கயல் சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக சிஜா ரோஸ் நடித்துள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் 2014ல் கயல் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி கவனம் பெற்ற சந்திரன் பின்னர் வெற்றிப் படங்கள் அமையாமல் இருந்தார்.
கடைசியாக சந்திரன் நடிப்பில் 2022ல் மன்மத லீலை படமும் 2024ல் சட்னி சாம்பார் என்ற இணையத் தொடரும் வெளியாகின. தற்போது, மீண்டும் சிங்கா என்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் அளிக்க முயற்சித்து வருகிறார்.
எஸ்ஆர் ஃபிலிம்ஸ், ருத்ரம் சினிமாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ராஜ துரை சிங்கம் இயக்கும் இந்தப் படம் நாயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சிஜா ரோஸ், மீனாட்சி ரவீந்திரன், ஆதித்யா கதிர், அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கயல் சந்திரன் இந்தப் படத்திலாவது மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.
Summary
Kayal Chandran SINGHA – Official Teaser out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!
த்ரிஷ்யம் - 3 டீசர்!

நூறு சாமி படத்தின் டீசர் தேதி!

உமாபதி ராமையா இயக்கத்தில் டிஎன் 2026! டீசர் அறிவிப்பு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



