செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மாற்றம் தேவையா? அஜித் குமாரின் சர்ச்சையும் மேலாளரின் விளக்கமும்!

நடிகர் அஜித் குமார் கூறியதாக பரவிய வதந்திகளும் அதற்கான விளக்கம் குறித்தும்...

News image

வாக்களித்த பின்னர் அஜித் குமார். - படம்: பிடிஐ

Updated On :23 ஏப்ரல் 2026, 2:43 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதல் ஓட்டாக நடிகர் அஜித் திருவான்மியூர் வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அஜித்திடம் பேட்டி எடுக்க முண்டியடித்தது. ஆனால், அவர் அவர் யாரிடமும் பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், அஜித் குமார் கூறியதாக தனியார் தொலைக்காட்சியின் இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் செய்தியாளர்கள், “மாற்றம் தேவையா? “ எனக் கேட்க, “தேவையில்லை” என அஜித் குமார் கூறியதாக இணையத்தில் வைரலாகியது.

இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் அப்படி எதுவும் சொல்லவில்லை. தவறான தவலைப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

அந்தக் குறிப்பிட்ட தனியார் செய்தி நிறுவனமும் அந்தச் செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Is Change Needed? Ajith Kumar's Controversy and His Manager's Clarification!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.