மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

நடிகர் கவின் குடும்பக் கதையில் நடிக்கவுள்ளது குறித்து...

kavin

கவின் 11வது படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :

ஹாய் படத்தைத் தொடர்ந்து, குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளார்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ’ஹாய்’.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கவினின் 11-வது திரைப்​படத்தை பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய​வர்​தனன் தயாரிக்​கிறார்.

Story image

இந்தப் ​படத்தை பார்க்​கிங் படத்தின் இயக்​குநர் ராம்​கு​மார் பால​கிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த பிர​வீன் பரம சிவன் இயக்​கு​கிறார். குடும்பத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்படுகிறது.

இதன் படப்​பிடிப்பு மே மாத இறு​தி​யில் தொடங்​கு​கிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள், மற்ற அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Following the film Haai, actor Kavin is set to star in a new family-centric movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.