மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அன்பில் அவன்... அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தனின் படத் தலைப்பு விடியோ!

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு விடியோ குறித்து...

Ashok Selvan, Preity Mukhundhan

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் - படங்கள்: எக்ஸ் / திங்க் மியூசிக் இந்தியா.

Published On :

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அன்பில் அவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

போர் தொழில் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்துக்கான கதையை எழுதியுள்ள நிலையில், இதனை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்குகிறார்.

ஓ மை கடவுளே படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கான திரைக்கதையில் விக்னேஷ் ராஜா, ஆர் கார்த்திகேயன், அசோக் செல்வன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.

இந்தப் படத்தில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

பீட்டர் ஹெயின் சண்டைப் பயிற்சியில் உருவாகியுள்ள இந்தப் படம் ரொமான்ஸ் மற்றும் அதிரடி ஆக்‌ஷனில் உருவாகியுள்ளதாக படத்தலைப்பு டீசரில் இருந்து அறியமுடிகிறது.

கடைசியாக அசோக் செல்வன் நடித்த எமக்குத் தொழில் ரொமான்ஸ் சுமாரான வரவேற்பையே பெற்றது. தக் லைப் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் சுமாராகவே இருந்ததால் இந்தப் படம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Summary

Anbil Avan - Title Announcement Video of Ashok Selvan, Preity Mukhundhan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.