அழகே அழகு தொடரை இயக்கிவரும் இயக்குநர் பிரவீன் பென்னட் புதிய தொடர் ஒன்றை இயக்கவுள்ளார்.
சிறகடிக்க ஆசை, கனா கண்டேனடி, செந்தூர பூவே ஆகிய வெற்றித் தொடர்களுக்கு கதை எழுதிய குரு சம்பத்குமார் இத்தொடருக்கும் கதை எழுதவுள்ளார். குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் இத்தொடரை தயாரிக்கவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில், திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
செல்லம்மா தொடரில் நடித்த அன்ஷிதா, தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நக்ஷத்ரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அன்ஷிதாவுக்கு ஜோடியாக குணா குமரன், நக்ஷத்திராவுக்கு ஜோடியாக பிரேம் ஜேக்கப் நடிக்கின்றனர். இவர் நீ நான் காதல் தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
பழமைவாதம் நிறைந்த வீட்டில் அனைத்தையும் சகித்துக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் மூத்த மருமகள், அதே வீட்டில் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என நினைத்து வேலைக்குச் செல்லத் துடிக்கும் இளைய மருமகள் என இருவரை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
நாடகத்தன்மை இல்லாமல் மிகவும் தத்ரூபமாக நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருவதால், பல ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக அழகே அழகு தொடர் உள்ளது.
இத்தொடரை இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி, மகாநதி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி ஆகிய வெற்றித் தொடர்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ரெசாட் என்ற இணையத் தொடர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அழகே அழகு தொடருக்கு மத்தியில் தற்போது மீண்டும் ஒரு தொடரை பிரவீன் இயக்கவுள்ளார். இத்தொடருக்கு குரு சம்பத்குமார் கதை எழுதவுள்ளார். இவர் சிறகடிக்க ஆசை, கனா கண்டேனடி போன்ற இயல்பான தொடர்களின் கதையை எழுதியவர்.
தற்போது இவர்கள் இருவரும் இணையவுள்ளதால், மீண்டும் ஒரு எதார்த்தமான கதையை நெடுந்தொடராக எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2026 ஆம் ஆண்டின் சிறந்த தொடர் எதிர்நீச்சல் -2!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் காலமானார்!

இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் 3 தொடர்கள்!

100 நாள்களை நிறைவு செய்த அழகே அழகு தொடர்!
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3




