புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஓடிடியில் வெளியான துஷாரா விஜயனின் காட்டாளன்!

காட்டாளன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

kattalan

காட்டாளன் போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :

துஷாரா விஜயன் நடித்துள்ள காட்டாளன் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான காட்டாளன் திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. யானை தந்த வேட்டையை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்ததால், இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தை பால் ஜார்ஜ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். க்யூப்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்தப் படத்தின் மூலம், முதல்முறையாக நடிகை துஷாரா விஜயன், மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் சுனில், ஜகதீஷ் மற்றும் ஆவேஷம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹிப்ஸ்டர் ஆகியோர் நடித்துள்ளனர்.

1995-களில் நடக்கும் நிகழ்வுகளாகத் தொடங்கும் இந்தப் படத்தின் கதை, காட்டில் நடக்கும் பழிவாங்கல், கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காட்டாளன் திரைப்படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் இன்று(ஆக. 13) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

The movie Kaattalan, starring Dushara Vijayan, has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.