துஷாரா விஜயன் நடித்துள்ள காட்டாளன் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான காட்டாளன் திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. யானை தந்த வேட்டையை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது.
பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தை பால் ஜார்ஜ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். க்யூப்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தப் படத்தின் மூலம் நடிகை துஷாரா விஜயன் முதல்முறையாக மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் சுனில், ஜகதீஷ் மற்றும் ஆவேஷம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹிப்ஸ்டர் ஆகியோர் நடித்துள்ளனர்.
1995-களில் நடக்கும் நிகழ்வுகளாகத் தொடங்கும் இந்தப் படத்தின் கதை, காட்டில் நடக்கும் பழிவாங்கல், கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காட்டாளன் திரைப்படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் வரும் ஆக. 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Details regarding the OTT release of the film Kaattalan, starring Dushara Vijayan, have been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிடிஎன் படத்தில் ரங்கநாயகி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன்!

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

4 மாதங்களில் 13 கிலோ உடல் எடையைக் குறைத்த துஷாரா விஜயன்!

மீண்டும் மாரியம்மாவாக நடிக்கக் காத்திருக்கிறேன்: துஷாரா விஜயன்
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple




