முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

கதைக்கு அப்பால்... எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வத்தின் புதிய முயற்சி!

எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் ஒவ்வொரு கதைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசவுள்ளது குறித்து...

Ethirneechal director thiruselvam

இயக்குநர் திருச்செல்வம் - இன்ஸ்டாகிராம்

Published On :

எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் ஒவ்வொரு கதைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசவுள்ளார். தன்னுடன் பணியாற்றிய பிரபலங்களை அழைத்து அவர்களுடன் உரையாடல் நடத்தவுள்ளார்.

கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசிக்குடும்பம், வல்லமை தாராயோ ஆகிய தொடர்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடர் மூலம் இளம் தலைமுறையினரையும் கவர்ந்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், சிறந்த தொடருக்கான தமிழக அரசின் விருதை 4 பிரிவுகளில் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி சன் குடும்ப விருதுகளையும் குவித்துள்ளது.

எதிர்நீச்சல் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். தனது நெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் தற்போது புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, ஒவ்வொரு கதையில் வரும் நடிகர்கள் மட்டுமின்றி அதற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள், ஒவ்வொரு கதைக்கு பின்னால் உள்ள கதைகள் குறித்துப் பேசவுள்ளார்.

சேர் டிக்கெட் என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கி நடத்திவரும் திருச்செல்வம், இதில் பல நடிகர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதனிடையே தற்போது கதைக்கு அப்பால் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளார்.

அதில் கதையில் தோன்றும் ஒவ்வொரு கலைஞரின் அரசியல், கருத்து, உழைப்பு, கடந்து வந்த பாதை, மகிழ்ச்சி, சோகம், தவறுகள், தியாகங்கள் என பலதரப்பட்ட விஷயங்களைப் பேசவுள்ளார். அவருன் பணியாற்றிய கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

நூறு தலைப்புச் செய்தியை விட உரையாடல் அதிகம் சொல்லித் தரும் எனக் குறிப்பிட்டுள்ள திருச்செல்வம், இது நேர்காணல் அல்ல, உரையாடல் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள ப்ரோமோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

Ethirneechal director thiruselvam host news show in chait ticket new programe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.