நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப் படத்தை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளான ஆக.13ஆம் தேதியன்று இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு எழுத்தாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் வரைக்கும் சென்று மிகவும் புகழ்பெற்ற இந்திய நடிகையாக மாறினார். பான் இந்திய மொழிகளில் சேர்த்து 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது 54ஆவது வயதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்தார்.
நடிகை ஸ்ரீதேவி, பிப்ரவரி 24, 2018 அன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துபை சென்றிருந்தபோது குளியல் தொட்டியில் மூழ்கி காலமானார். இது அப்போது பல சர்ச்சைகளை எழுப்பியது.
இந்த நிலையில், தீரஜ் யு. குமார் எழுதிய எம்ப்ரெஸ்: தி டிஃபெனடிவ் பயோகிராபி ஆஃப் ஸ்ரீதேவி (Empress: The Definitive Biography of Sridevi) என்ற புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் புக்ஸ் பதிப்பித்துள்ளது.
இதில் ஸ்ரீதேவியின் குழந்தைப் பருவம் முதல் இந்தியாவின் முதல் பான் இந்திய நடிகையாக மாறிய வாழ்க்கைப் பயணம் என அவரது ஐம்பதாண்டுகளை குறித்து எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, “ஒரேயொருவர் மட்டுமே. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம். ஹேப்பி ஹெவன்லி பர்த்டே. ஸ்ரீதேவி: எம்ப்ரெஸ் விரைவில் வருகிறது” எனக் கூறியுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் ஏழு முக்கியமான திரைக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளார்கள். குறிப்பாக அமிதாப் பச்சன், ஜாவேத் அக்தரின் தனிச்சிறப்பான தகவல்கள் அடங்கியுள்ளன. 150க்கும் அதிகமான அறியவகை புகைப்படங்கள் இருக்கின்றன.
Thank you so much @priyankachopra mam. #Empress #Sridevi @SrideviMemoir @SrideviBKapoor https://t.co/aPdFKvEljR
— Dhiraj U Kumarr (@AuthorDhiraj) August 13, 2026
Summary
Priyanka Chopra unveils cover of upcoming Sridevi biography 'Empress'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி

ஊடகங்களைப் போல் நாங்களும் அமைதியாக இருக்க வேண்டுமா? பிரியங்கா கேள்வி!

கோமியம் நிபுணர்! ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் குறித்த பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு!

பிரியங்கா சோப்ரா பிறந்த நாள்: வாரணாசி படக் காட்சிகளுடன் வாழ்த்திய ராஜமௌலி!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju




