முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

பாரதிராஜாவும் பாக்யராஜும் கடவுளின் குழந்தைகள்: ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் குறித்து பேசியுள்ளார்...

News image

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:50 pm IST

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் குறித்து பேசியுள்ளார்.

மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ‘ராஜகோபுரங்கள்’ என்கிற பெயரில் சென்னையில் நேற்று (ஆக. 16) நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் பாரதிராஜா மற்றும் பாக்யராஜின் நினைவுச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பாரதிராஜாவும் பாக்யராஜும் கடவுளின் குழந்தைகள். அவர்கள் தங்கள் திறமையால்தான் முன்னேறினார்கள் என்றால் நம்ப மாட்டேன். திறமையால் உழைக்கப் பலர் தயாராக இருந்தாலும் எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்கு சந்தர்ப்பம் அமைய வேண்டும். அந்த வாய்ப்பை கடவுள்தான் அளிப்பார்.

கேமராவை கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் இயக்குநர் பாரதிராஜா. அங்கு சென்று சாதாரண கதாபாத்திரங்களை எழுதி, வெற்றி கண்டார். எல்லாரும் செல்லும் வழியில் சென்றால் வெற்றி பெற முடியாது. நாம் புதிதாக அல்லது வித்தியாசமாக ஒன்றைச் செய்யும் போதுதான் வெற்றி பெற முடியும். பாரதிராஜா அப்படிப்பட்டவர். அவரின் முதல் மரியாதை எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.

அதேபோல் இயக்குநர் பாக்யராஜ். அவர் சினிமாவில் 50 ஆம் ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்டு தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசளித்தேன். அதனை இறுதி வரை பாக்யராஜ் அணிந்திருந்ததாக பூர்ணிமா சொன்னார். அதைக் கேட்டும் மிகவும் சந்தோஷப்பட்டேன். பாக்யராஜிடம் ஒரு கதையைச் சொன்னால் அதனை உள்வாங்கிக் கொண்டு, எப்படியெல்லாம் எடுக்கலாம் என்பதையே சிந்தித்துக் கொண்டிருப்பார். அதனால்தான் அவர் திரைக்கதை மன்னர்.” எனத் தெரிவித்தார்.

Actor Rajinikanth has spoken about directors Bharathiraja and Bhagyaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.