
ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் ஜெயிலர் 2!
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ஐமேக்ஸ் தரத்திலும் வெளியாவது குறித்து...
ஜெயிலர் 2 போஸ்டர்...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர் 2” திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் கடந்த 2023 ஆம ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “ஜெயிலர்”. இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் ஐமேக்ஸ் தரத்திலும் வெளியாகும் என இன்று (அக். 01) படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கெனவே, முதல் பாகத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been announced that the movie "Jailer 2," starring Superstar Rajinikanth, will be released in IMAX format.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






