தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் டாப்ஸியின் காந்தாரி!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள காந்தாரி படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

Poster of the movie *Gandhari*.

காந்தாரி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / நெட்பிளிக்ஸ்

Published On :

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள காந்தாரி படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

டாப்ஸி பன்னு (39 வயது) தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆசி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சோபிக்காமல் சென்றது.

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.

கனிகா திலோன் எழுதியுள்ள காந்தாரி படத்தினை தேவாஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

”சூழ்நிலை கடினமாகும்போது, ​​வலிமையானவர்கள் சவாலை எதிர்கொள்ள கடினமாக உழைப்பார்கள். இந்த ஒற்றைவரிதான் காந்தாரி படம் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அனுபவமாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது” என இந்தப் படம் குறித்து முன்னதாக டாப்ஸி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Taapsee Pannu Gandhari premiered on netflix

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.