பிக் பாஸ்: விக்ரமை கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் போட்டியாளர்கள்!

விக்ரமை குறிவைத்து முன்னாள் போட்டியாளர்கள் விமர்சிப்பது பற்றி...
பிக் பாஸ்
பிக் பாஸ்Photo: Vijay TV
Updated on
1 min read

பிக் பாஸ் தமிழ்: பிக் பாஸ் வீட்டுக்குள் வருகைதரும் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் விக்ரமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தற்போது வீட்டுக்குள் 6 போட்டியாளர் மட்டுமே இருக்கின்றனர்.

இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க்கை போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வருகை தருகின்றனர்.

முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகைதந்த வியானா ஒவ்வொரு போட்டியாளர்களின் விளையாட்டு குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது, விக்ரமை மட்டும் குறிவைத்து கடுமையாக வியானா விமர்சித்திருந்தார்.

“வக்கிரம் விக்கல், முதலைக் கண்ணீர் என்ற பெயர்களுக்கு சரியாகப் பொருந்தக்கூடிய நபர் நீங்கள். அடுத்தவர் மனதை மாற்றி விளையாடக் கூடிய திறமைப்படைத்தவர் நீங்கள். ஒவ்வொரு முறையும் தவறு செய்துவிட்டு அழுதால் அந்த தவறு சரியாகிவிடுமா?. இந்த வீட்டில் விமர்சனத்தை துல்லியளவும் ஏற்றுக் கொள்ள முடியாதவர் நீங்கள் மட்டும்தான். உங்கள் பேச்சைக் கேட்டு விளையாடாமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார்.” எனத் தெரிவித்தார்.

அதேபோல், தற்போது வீட்டுக்குள் வந்துள்ள பிரவீன் ராஜும் விக்ரமை குறிவைத்துள்ளார்.

இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் விக்ரமிடம் பேசும் பிரவீன் ராஜ், “உங்களுக்கு நீங்கள் உண்மையாக இல்லை. உள்ளே இருந்த மனிதாபிமானத்தை சாவடித்துவிட்டீர்கள்.” என்று தெரிவித்தார்.

விக்ரமுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வினோத், ”எல்லோரையும் என்ன சொல்கிறாயோ அந்த வேலையைதான் நீ வீட்டுக்குள் பார்த்துக் கொண்டு, அனைவரின் பின்னாலும் பேசிக் கொண்டிருந்த” என்றார்.

அவருக்கு பதிலளித்த பிரவீன் ராஜ், “நான் 33 நாள்கள் சம்பாதித்த மக்கள் ஆதரவை நீ 90 நாள் இருந்தும் சம்பாதிக்க முடியுமா எனத் தெரியவில்லை” என்று சவால் விடுத்தார்.

அனைத்து முன்னாள் போட்டியாளர்களும் விக்ரமை குறிவைத்து ஒருதலைபட்சமாக விமர்சிப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Bigg Boss: Former contestants severely criticize Vikram!

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வியானாவுடன் வெளியேறுகிறேன் : விக்கல்ஸ் விக்ரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com