தமிழ்த் தீ... புரமோஷனுக்கு கேரளம் சென்ற பராசக்தி குழு!

கேரளம் சென்ற பராசக்தி குழு...
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா
Updated on
1 min read

பராசக்தி திரைப்படக் குழுவினர் புரமோஷனுக்காக கேரளம் சென்றுள்ளனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் அதிக பொருள்செலவில் உருவான பராசக்தி திரைப்படம் வருகிற ஜன. 10 ஆம் தேதி உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது.

மொழித் திணிப்புக்கு எதிரான தமிழ் மாணவர்களின் எழுச்சியாகவும் உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டும் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

டிரைலர் காட்சியில், “நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள். ஹிந்தி மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை” போன்ற வசனங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு இன்று கொச்சி சென்றுள்ளனர். அங்கு, படத்திற்கான விளம்பர பணிகளை மேற்கொண்டு அடுத்ததாக ஹைதராபாத் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா
என்னைத் தாலாட்டும்... வைரலான விஜய்!
Summary

team parasakthi arrived in kochi for parasakthi promotion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com