

விஜய்யின் தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பொங்கல் திருநாள் விடுமுறையில் வெளியாகவிருந்த விஜய்யின் ஜன நாயகன், தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர், லியோ படங்களை ரீ-ரிலீஸ் செய்வதாய் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தெறி படமும் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.