

ஹாலிவுட் கதாபாத்திரங்களான அவெஞ்சர்ஸ் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருப்பதாக ஐஆர்சிடிசி நகைச்சுவை பதிவிட்டுள்ளது.
அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள் இந்தியாவில் சுற்றுலாவுக்காக வருகை தந்திருப்பதாக ஐஆர்சிடிசி நகைச்சுவையாக பதிவிட்டு, விளம்பரம் செய்து வருகிறது.
படத்தின் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவரான ஸ்டீவ் ரோஜர்ஸ் சிம்லாவுக்கு சுற்றுலா வந்திருப்பதாகவும், பயணம் முடிந்ததும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே-வுக்கு திரும்பி விடுவார் என்றும் ஐஆர்சிடிசி பதிவிட்டுள்ளது.
அதேபோல, காஷ்மீருக்கு தார் சுற்றுலா வந்திருப்பதாகவும், ப்ரொஃபெஷர் எக்ஸ் கோவாவுக்கு சுற்றுலா வந்திருப்பதாகவும் ஐஆர்சிடிசி பதிவிட்டுள்ளது. மேலும், அவெஞ்சர்ஸ் படங்களின் கதாபாத்திரங்களை ஐஆர்சிடிசி சுற்றுலாவுக்காக அழைத்து வரும் என்று ரசிகர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே, வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களை அவ்வப்போது தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது.
மார்வெல் மூவிஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.