நடிகர்கள் ராமராஜன், கனகா இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
கரகாட்டக்காரன் திரைப்படத்தை விடுத்து தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது என்கிற அளவிற்கு மாநிலத்தின் பட்டி, தொட்டியெல்லாம் ஹிட் அடித்த இப்படத்தின் மூலம் நடிகர்கள் ராமராஜன், கனகா ஜோடி பெரிய புகழைப் பெற்றனர்.
முக்கியமாக, மாங்குயிலே பூங்குயிலே பாடல் ஒலிக்காத நிகழ்ச்சிகளே இல்லையென்கிற அளவிற்கு இந்த இணைக்கான வரவேற்பு இருந்தது.
இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து ராமராஜனும் கனகாவும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பகிர்ந்த ரசிகர்கள், கரகாட்டக்காரன் படத்தின் நினைவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.