

“எகோ” திரைப்படத்தை பிரபல நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் தின்ஜித் அய்யதன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தீப் பிரதீப், பியானா மோமின், நரேன், வினீத், சௌரப் சச்தேவா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் “எகோ”.
மலையாள திரையுலகில், 2025 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதன்மைப் பெற்ற இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.
இந்த நிலையில், எகோ திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியதாவது:
“மலையாள திரைப்படமான எகோ ஒரு தலைசிறந்த படைப்பு. அனைத்து உயரிய கௌரவங்களுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மோமின். உலகத் தரம் வாய்ந்த நடிப்பு” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.