

மலேசியாவில் தமிழ்த் திரைத் துறையின் விளம்பரதாரர் அப்துல் மாலிக்கின் புதுமனைப் புகுவிழாவில் விஜய் பங்கேற்றார்.
மலேசியாவில் தமிழ்த் திரையுலகின் விளம்பரதாரராக இருந்துவரும் அப்துல் மாலிக் தஸ்திகீரின் புதுமனைப் புகுவிழாவில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பங்கேற்று, அப்துல் மாலிக்கின் புதிய வீட்டைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அப்துல் மாலிக்கின் குடும்பத்தினருடன் கேக் வெட்டி, கொண்டாடியதுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் விடியோ தற்போது வெளியாகி, சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
விஜய்யின் தீவிர ரசிகரான அப்துல் மாலிக்தான், மலேசியாவில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
இதனிடையே, ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று (ஜன. 15) காலை தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.