நடிகர் அருண் விஜய் நடித்த ரெட்ட தல திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியான ரெட்ட தல திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்தில் நாயகிகளாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், இப்படம் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, அருண் விஜய் இயக்குநர் முத்தைய்யா இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.