ஆன்மிக தொடரில் அறிமுகமாகும் விஜய் - அஜித் பட நாயகி!

எதிர்நீச்சல் புகழ் ஹரிபிரியா இசை, கமலேஷ், அனு மோகன் உள்ளிட்டோர் சங்கவி உடன் நடிக்கவுள்ளனர்.
சங்கவி
சங்கவிபடம் - இன்ஸ்டாகிராம்
Updated on
1 min read

நடிகை சங்கவி சின்ன திரையில் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். பாளையத்து அம்மன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இத்தொடரில் சங்கவி உடன் எதிர்நீச்சல் புகழ் ஹரிபிரியா இசை, கமலேஷ், அனு மோகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

காவ்யா ரமேஷ் என்ற இயற்பெயர் கொண்ட நடிகை சங்கவி, அஜித் குமார் நடிப்பில் வெளியான அமராவதி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் உடன் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு, கன்னடம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ள சங்கவி, இதுவரை 90க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 50 வயதாகும் சங்கவி, பாளையத்து அம்மன் என்ற தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத்தொடர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு முன்பு கோகுலத்தில் சீதை, சாவித்ரி, காலபைரவன் உள்ளிட்ட தொடர்களில் சங்கவி நடித்துள்ளார். எனினும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் சங்கவி களமிறங்கியுள்ளார்.

பாளையத்து அம்மன் தொடர், ஆன்மிக நிகழ்வுகளை திரைக்கதையாக வைத்து ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இத்தொடரின் மீதான இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சங்கவி
புது வசந்தம் தொடரில் அம்மனாக நடிக்கும் அக்‌ஷயா!
Summary

Actress sangavi act news serial Paalayathu amman telecast in jaya tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com