நடிகர் மோகன்லால் நடிக்கும் அவரது 367வது திரைப்பட இயக்குநர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியான எம்புரான், துடக்கம், ஹிருதயப்பூர்வம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.
இதனைத் தொடர்ந்து, அடுத்தது மோகன்லால் யார் இயக்கத்தில் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மோகன்லாலின் 367வது திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைக் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.
விஷ்ணு மோகன் மேப்படியான், கத இன்னுவர திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.