

சின்ன திரை நடிகை மெளனிகா தான் கருவுற்றிருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். நீண்ட நாள்கள் காதலித்துவந்த ரஞ்சனி தொடரின் நாயகன் சந்தோஷை கடந்த ஆண்டு மெளனிகா திருமணம் செய்துகொண்டார்.
தற்போது தாம் கருவுற்றிருப்பதாகவும், இந்த ஆண்டு தங்கள் வாரிசை வரவேற்க காத்திருப்பதாகவும் ரசிகர்களுடன் சமூக வலைதளப் பக்கத்தில் மெளனிகா பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரஞ்சனி தொடரின் நாயகன் சந்தோஷ், தனது நீண்ட நாள் காதலியான நடிகை மெளனிகாவை கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழில் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நாயகனாகவும் நடித்திருந்தார். இதற்கு முன்பு அண்ணா தொடரிலும் சந்தோஷ் நடித்திருந்தார்.
இவர் மெளனிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது மெளனிகா தான் கருவுற்றிருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
பிளாக் ஷீப் யூடியூப் சேனல்களின் தொடர்களிலும், கனா காணும் காலம் தொடரிலும் மெளனிகா நடித்துள்ளார். லப்பர் பந்து படத்தில் நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இருவரும் நடிப்புத் துறையில் தங்கள் முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றுகொண்டிருக்கும் நிலையில், சந்தோஷும் மெளனிகாவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையில் நுழைந்தனர்.
இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையும் என்றும், ஏனெனில் தங்கள் வாரிசை வரவேற்க இருவரும் காத்திருப்பதாகவும் மெளனிகா பதிவிட்டுள்ளார். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் மெளனிகா - சந்தோஷ் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.