மறுவெளியீடாகும் சிம்புவின் சிலம்பாட்டம்!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான சிலம்பாட்டம் படத்தின் மறுவெளியீடு குறித்து...
Silambattam film poster
சிலம்பாட்டம் பட போஸ்டர். படம்: லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ்
Updated on
1 min read

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான சிலம்பாட்டம் திரைப்படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடாகுமென தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகிறது.

லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் எஸ். சரவணன் இயக்கிய சிலம்பாட்டம் திரைப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் (தமிழ், விச்சு) நடித்திருப்பார். சிம்புவுடன் பிரபு, சினேகா, சானா கான், நெடுமுடி வேணு, கிஷோர் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்.6ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் மறுவெளியீடான அஜித்தின் மங்காத்தா திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Silambattam film poster
மூன்று பாகங்களாக உருவாகும் அனிமல்..! 2-ஆம் பாகத்தின் அப்டேட் பகிர்ந்த ரன்பீர்!
Summary

The film Silambattam, starring actor Simbu, is being re-released after 18 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com