2014 - 22 ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள் பெறுபவர்கள் யார் யார்? முழு விவரம்!

2014 - 22 ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள் பெறுபவர்கள் பட்டியல்.
சைத்ரா ரெட்டி, கார்த்திக் ராஜ், சபானா, சஞ்சீவ்.
சைத்ரா ரெட்டி, கார்த்திக் ராஜ், சபானா, சஞ்சீவ்.
Updated on
3 min read

2014 முதல் 2022 வரையிலான சின்ன திரைக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்ககள் ஆகியோருக்குச் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2014

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (அழகி)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (வள்ளி)

சிறந்த  கதாநாயகன் - எம்.ராஜ்குமார் (வள்ளி)

சிறந்த கதாநாயகி - ஆர்.ராதிகா சரத்குமார்  (வாணி ராணி) (ராணி கதாபாத்திரம்) 

2015

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (ரோமாபுரி பாண்டியன்)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் )

சிறந்த  கதாநாயகன் - ஆர்.பாண்டியராஜன் (என் தங்கை)

சிறந்த கதாநாயகி - வாணி போஜன் (தெய்வமகள்)

2016

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (ராமானுஜர்)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (கல்யாண பரிசு )

சிறந்த  கதாநாயகன் - கௌசிக் (ராமானுஜர்)

சிறந்த கதாநாயகி - நீலிமா ராணி (தாமரை)

2017

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (நந்தினி)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (தாய் வீடு )

சிறந்த  கதாநாயகன் - கிருஷ்ணா  (தெய்வமகள்)

சிறந்த கதாநாயகி - சங்கவி (தாய் வீடு)

2018

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (பூவே பூச்சூடவா)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (சுப்பிரமணியபுரம் )

சிறந்த  கதாநாயகன் - தலைவாசல் விஜய் (அழகு)

சிறந்த கதாநாயகி - ரேவதி (அழகு)

2019

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (செம்பருத்தி)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (பாண்டவர் இல்லம் )

சிறந்த  கதாநாயகன் - வ.சஞ்சிவ் (கண்மணி)

சிறந்த கதாநாயகி - ரேஷ்மா (பூவே பூச்சூடவா)

2020

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (ராசாத்தி)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (பாரதி கண்ணம்மா )

சிறந்த  கதாநாயகன் - ஜெய் ஆகாஷ் (நீ தானே என் பொன் வசந்தம்)

சிறந்த கதாநாயகி - சபானா ஷாஜகான் (செம்பருத்தி)

2021

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (சுந்தரி)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (ஒரு ஊர்ல இரண்டு ராஜகுமாரி )

சிறந்த  கதாநாயகன் - கார்த்திக் ராஜ் (செம்பருத்தி)

சிறந்த கதாநாயகி - கெபரல்லா  செல்லஸ் (சுந்தரி)

2022

சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு (எதிர்நீச்சல்)

சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு (கண்ணெதிரே தோன்றினாள் )

சிறந்த  கதாநாயகன் - சஞ்சீவ் (கயல்)

சிறந்த கதாநாயகி - சைத்ரா (கயல்)

சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.ராஜ்குமரர், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய்ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத் திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமாராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானாஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அழகி, ரோமாபுரி பாண்டியன், ராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படுத்துடன், சிறந்த கதாநாயகன்/ கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, வரும் பிப். 13 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விருதாளர்களுக்கு வழங்கிப் பாராட்டுகிறார்.

Summary

The Tamil Nadu government has announced the awards for television serials from 2014 to 2022.

சைத்ரா ரெட்டி, கார்த்திக் ராஜ், சபானா, சஞ்சீவ்.
2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com