நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் சொகுசு காரை பரிசளித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கட்டா குஸ்தி”. நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி குஸ்தி வீராங்கனையாக நடித்திருந்த இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, இயக்குநர் செல்லாவு அய்யாவு இயக்கத்தில் உருவான இப்படத்தின் 2 ஆம் பாகமான கட்டா குஸ்தி 2 திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
நடிகர்கள் கருணாஸ், காளி வெங்கட், லிஸ்ஸி ஆண்டனி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் 3 நாள்களில் ரூ.22 கோடிக்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கே கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்த நிலையில், கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 9) நடைபெற்றது. அப்போது, நாயகன் விஷ்ணு விஷாலுக்கு விலைவுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பரிசளித்துள்ளார்.
Summary
Producer Ishari K. Ganesh has gifted a luxury car to actor Vishnu Vishal for the movie Gatta Kusthi 2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









