வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

டாம் க்ரூஸ் படத்திலிருந்து விலகிய ஃபகத் பாசில்! காரணம் என்ன?

டாம் க்ரூஸ் நடித்த டிக்கர் படத்திலிருந்து ஃபகத் பாசில் விலகியது பற்றி பேசிய விடியோ வைரலாகி வருகின்றது.

News image

ஃபகத் பாசில் / டாம் க்ரூஸ்

Updated On :14 ஜூலை 2026, 10:55 pm IST

டாம் க்ரூஸ் நடிப்பில் அலெஜாண்ட்ரோ ஜி. இனர்ரிட்டு இயக்கிய டிக்கர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இப்படத்தில் பிரிட்டன் நடிகர் ரிஸ் அகமது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் பேசியது வைரலாகி வருகின்றது.

கடந்தாண்டு வெளியான ஒரு நேர்காணலில் இதுபற்றிப் பேசிய ஃபகத் பாசில் இந்தப் படத்திலிருந்து விலகியது பற்றிப் பேசியுள்ளார். அதில், “அவர் என்னை நிராகரித்துவிட்டார் எனக் கூறமுடியாது. எனது உச்சரிப்பு பற்றிதான் அவர் அவர் யோசித்தார். எனது ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, நான் அமெரிக்கா சென்று அங்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது.

ஆனால், அதற்கான செலவைத் தயாரிப்பு தரப்பினர் ஏற்க தயாராக இல்லை. அதனால் அந்த வாய்ப்பை நான் தவிர்த்துவிட்டேன். இல்லையென்றால், கண்டிப்பாக நான் ஓடியிருப்பேன். வணிகரீதியான அம்சங்கள் கைகூடியிருக்காது. ஆனால், எனது உச்சரிப்பிற்காக அவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஃபகத் பாசில் மட்டுமின்றி ஹிந்தி நடிகர் வீர் தாஸும் இந்தப் பாத்திரத்திற்கு ஆடிஷன் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது எக்ஸ் தளப் பதிவில், “இதற்காக நான் இரண்டு முறை ஆடிஷன் சென்றேன். அவர்கள் ரிஸ் அகமதுவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” எனப் பதிவிட்டிருந்தார்.

Summary

A video of Fahadh Faasil talking about his exit from the film digger starring Tom Cruise is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.