பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஒடிசிக்குப் பின் 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கும் கிறிஸ்டோஃபர் நோலன்!

சினிமாவிலிருந்து 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கும் நோலன்...

News image

கிறிஸ்டோஃபர் நோலன்

Updated On :20 ஜூலை 2026, 1:42 pm IST

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் சினிமாவிலிருந்து 3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவான தி ஒடிசி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும், உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 2000 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 70 கோடி இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் சினிமாவிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஓய்வெடுக்க போவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய நோலன், “ தி ஒடிசி திரைப்படத்தின் பணிகள் மிகவும் கடினமாக இருந்தது. அது என் உடல் மற்றும் மன உழைப்பின் எல்லையை எட்டச் செய்தது. இதனால், அடுத்த திரைப்படத்தைத் தொடங்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கும் ஒடிசிக்கும் இடையே மூன்று ஆண்டுகள் இடைவெளி இருந்தது. ஆனால், ஒடிசியின் முன் தயாரிப்பு பணிகளுக்கு அக்காலம் தேவைப்பட்டது. இந்த முறை, 3 ஆண்டுகள் கழித்தே நோலன் அடுத்த திரைப்பட வேலைகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.

Director Christopher Nolan has announced that he will take a three-year break from cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.