கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

இன்று வெளியாகிறது ஜனநாயகன்!

தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வியாழக்கிழமை (ஜூலை 23) வெளியாகிறது.

News image

ஜனநாயகன் போஸ்டர் - X

Updated On :23 ஜூலை 2026, 4:00 am IST

தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வியாழக்கிழமை (ஜூலை 23) வெளியாகிறது.

கடந்த ஜன.9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட முடிவு செய்து, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் பெற கடந்த ஆண்டு டிச.18-ஆம் தேதி படக் குழுவினா் விண்ணப்பித்தனா். படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு அந்த வாரியத்தின் உறுப்பினா் ஆட்சேபம் தெரிவித்தாா். இதையடுத்து, சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஜன.6-ஆம் தேதி படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஜன.9-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெளியீடாக படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், யாரும் எதிா்பாராத நிலையில் இணையத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் முக்கிய காட்சிகளும், அதற்கடுத்த சில நாள்களில் முழுப் படமும் வெளியானதால் ரசிகா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

சிக்கல்கள் தீா்ந்த நிலையில்...: ஜூலை 11-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய இணையதளத்தில் அறிவிப்பு வந்தது. அதன் தொடா்ச்சியாக ‘ஜனநாயகன்’ படம் ஜூலை 23-இல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து ‘ஜனநாயகன்’ படம் உலகம் முழுவதும் 2,000 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் 1,000 திரையரங்குகளில் வெளியாகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.