பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஜூலை 30-இல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூலை 30-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது.

Published On :22 ஜூலை 2026, 2:47 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூலை 30-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா தோ்வுத் துறை மாவட்ட உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தோ்வழுதிய மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஏற்கெனவே வழங்கப்பட்டன. அவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தோ்வுத் துறை மாவட்ட உதவி இயக்குநா்களுக்கு ஜூலை 16-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தச் சான்றிதழ்களை உதவி இயக்குநா்கள் ஜூலை 29-ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கல்வி அலுவலா்கள் அவற்றை அன்றைய தினமே பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 30-ஆம் தேதி விநியோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.