தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இந்தியாவில் ரூ.100 கோடி வசூலித்த தி ஒடிசி..! உலக அளவில் ரூ.3,000 கோடி!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி திரைப்படத்தின் வசூல் குறித்து...

Poster of the film The Odyssey.

தி ஒடிசி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஐமேக்ஸ்

Published On :

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ.100 வசூலை தாண்டியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

கிரேக்க காவியம் ஓமரின் ’தி ஒடிசி’ கவிதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ஜூலை 17ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் காமிராவினால் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரான் நடித்துள்ளார்கள்.

ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்ட தி ஒடிசி வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் தமிழில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ.100 என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக வார்னர் ப்ரோஸ் இந்தியா என்ற வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் ஐந்து நாள்களில் உலக அளவில் ரூ.500 கோடி வசூலிக்க, தற்போது ரூ.3, 108 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓப்பன்ஹெய்மர் படத்துக்குப் பிறகு தி ஒடிசி திரைப்படம் ரூ.100 கோடி என்ற இலக்கை இந்தியாவில் அடைந்துள்ளது. இந்தாண்டில் சிறந்த ஹாலிவுட் படமாக இந்தியாவில் ஒடிசி கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Christopher Nolan's 'The Odyssey' earns over Rs 100 crore at box office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.