பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தமிழர்களுக்கு நடிக்கத் தெரியாதா? இந்திரன்ஸால் இன்ஸ்டாவில் மோதும் ரசிகர்கள்!

இன்ஸ்டாகிராமில் தமிழ், மலையாள ரசிகர்களுக்கு இடையேயான விவாதம் குறித்து...

actors suriya and indrans

நடிகர்கள் சூர்யா, இந்திரன்ஸ்

Published On :

நடிகர் இந்திரன்ஸ் நடிப்பால் இன்ஸ்டாகிராம் சிலர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வசூலில் சக்கைபோடு போட்ட கருப்பு திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் கணிசமான ரசிகர்கள் கொண்ட காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் ரூ. 320 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படமாக இது மாறியுள்ளது அவரது ரசிகர்களிடம் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதை, திரைக்கதையாக இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் நடிகர்கள் சூர்யா, இந்திரன்ஸ், அனஹா உள்ளிட்டோரின் நடிப்பு பேசப்பட்டது.

முக்கியமாக, தன் மகளின் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த நகைகளைப் பறிகொடுத்த வேதனையிலும் ஏமாற்றத்திலிருக்கும் இந்திரன்ஸ் இடைவேளைக் காட்சியில், “எனக்கு கூகுள் பே பண்ணத் தெரியாது சாரே” என்கிற ஒரு வசனத்தில் பலரையும் கண்கலங்க வைத்தார். இந்திரன்ஸின் நடிப்பைப் பாராட்டும் விதமாக பலரும் அக்காட்சியையும் சூர்யா இந்திரன்ஸைக் குறித்து பாராட்டியதையும் இணைத்து ரீல்ஸ்களாக வெளியிட்டனர். அதுபோன்ற ரீல்ஸ்கள் லட்சக்கணக்கான விருப்பங்களையும் பெற்றது.

அதேநேரம், அந்தந்த ரீல்ஸ்களில் சில மலையாள ரசிகர்கள், “நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்களுக்கு இந்த நடிப்பே மிகப்பெரியதாக இருக்கிறது. ”, “நடிக்கத் தெரியாதவர்களைத்தான் தமிழ் சினிமா கொண்டாடும்.” போன்ற கருத்துகளைப் பதிவிட்டனர்.

இதனைக் கண்ட தமிழ் ரசிகர்கள், தமிழ் மொழியில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு பதிலடி கொடுத்தனர். ஆனால், காமெண்ட் பகுதிகளில் தொடர்ச்சியாக ரசிகர்கள் மோதிக்கொண்டும் வருகின்றனர்.

Some people are getting into conflicts on Instagram over actor Indrans's performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.