திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பீப் சாங்... தனக்குப் பிடித்த பாடலாகப் பதிவிட்ட சிம்பு!

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகர் சிம்புவின் இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து...

News image

நடிகர் சிலம்பரசன். - படம்: இன்ஸ்டா / சிலம்பரசன்டிஆர் அஃபிசியல்.

Updated On :7 ஜூன் 2026, 11:43 am IST

நடிகர் சிலம்பரசன் தனக்குப் பிடித்த சிம்பு பாடலாக பீப் சாங்கைப் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான டி.ஆர்.ராஜேந்திரன் மகன் சிலம்பரசன் சிறு வயது முதலே நடித்து வருகிறார். இவரும் அவரது தந்தையைப் போலவே பாடல் எழுதி பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் பீப் சாங் என்ற பாடல் இணையத்தில் வெளியானது. காதல் தோல்வியினால் பெண்களை இழிவுப்படுத்துவதாக அமைந்த அந்தப் பாடல் மிகவும் வைரலானது.

பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தார்கள். பின்னர், சிம்பு இந்தப் பாடலை தான் வெளியிடவில்லை என்றும் யாரோ லீக் செய்துவிட்டார் எனவும் கூறியிருந்தார்.

தற்போது, இன்ஸ்டாகிராமில் தனக்குப் பிடித்த சிம்பு பாடல் என்ற டெம்ப்ளேட் வைரலாகி வருகிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த பாடலை ஸ்டோரியில் வைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார்.

சிம்புவின் இன்ஸ்டா பதிவு.

சிம்புவின் இன்ஸ்டா பதிவு. - படம்: இன்ஸ்டா / சிலம்பரசன்டிஆர் அஃபிசியல்.

தனக்கு மிகவும் சிம்பு பாடல் என பீப் சாங்கில், ”தண்ணி அடிக்காதீங்க...” என்ற வரிகளைப் பதிவிட்டுள்ளார். சிம்பு ரசிகர்கள் இதனைப் பாராட்டினாலும் சிலர் மீண்டும் சர்ச்சையை கிளப்புவதாக இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.

Summary

Beep song is my favourite says STR in his insta page controversial starting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.