2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விமர்சனங்களால் பாதிப்பு? பெத்தி படத்தின் வசூல் நிலவரம்!

நடிகர் ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் ஒரு வாரத்தின் வசூல் நிலவரம் குறித்து...

Peddi movie's poster.

பெத்தி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

Published On :

நடிகர் ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் ஒரு வாரத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரித்தி சினிமாஸ் தயாரிப்பில் புச்சி பாபு சனா இயக்கிய பெத்தி திரைப்படம் கடந்த ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் ஷிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, ரவி கிஷன், விஜய் சந்திரசேகர், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் முதல் நாளில் ரூ. ரூ. 135.36 கோடி வசூலித்தது. இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் கீழ்த்தரமாக இருப்பதாகவும் இணையவாசிகளும் ஜான்வியின் ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வந்தார்கள். அதனை ஏற்று இயக்குநரும் மன்னிப்பு கேட்டார்.

பின்னர், இந்தப் படம் இரண்டு நாளில் உலகம் முழுவதும் ரூ.181.8 கோடி வசூலித்தது. பின்னர் விமர்சனங்கள் கடுமையாக படிப்படியாக வசூலில் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 345 கோடி வசூலித்ததாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற பெத்தி படம் ஜான்வி கபூரை காட்சிப்படுத்திய விமர்சனங்களால் வசூலில் பாதிக்கப்பட்டதாகவே வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Affected by reviews? The box office status of the movie 'Peddi'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.