செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

திரையரங்குகளில் பாப் கார்ன் விலைகளைக் குறைக்க வேண்டும்: ராம் சரண்

பாப் கார்ன் விலை குறித்து ராம் சரண்...

News image

ராம் சரண்

Updated On :23 ஜூன் 2026, 3:30 pm IST

நடிகர் ராம் சரண் பாப் கார்ன் விலைகளைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக உருவாகியிருந்தது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதுவரை இப்படம் ரூ. 400 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால், தமிழகத்தில் இப்படத்திற்கு எந்த வரவேற்பும் இல்லையென்றும் வசூல் ரீதியாக மிகச் சுமாரான தொகையையே வசூலித்துள்ளதாகத் தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய நடிகர் ராம் சரண், “இந்தியாவில் சினிமா இன்னும் மிக மலிவான பொழுதுபோக்காகவே இருக்கிறது. குடும்பத்தினருடன் சென்று படம் பார்ப்பது கூட்டுச் செயலாக நடைபெற்று வருவதால் திரையரங்குகளில் பாப் கார்ன் விலைகளைக் குறைத்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

டிக்கெட் விலையைவிட பல திரையரங்குகளில் பாப் கார்ன் விலை அதிகமாகவே இருக்கிறது. மல்டிபிளக்ஸுகளில் ரூ. 250க்கு மேலாக ஒரு பாப் கார்ன் விற்கபடுவதால் குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்பவர்கள் ரூ. 2 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாகின்றனர். இதனால், நடிகர் ராம் சரணின் இக்கருத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Actor Ram Charan has stated that popcorn prices should be reduced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.